இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி மலை மீண்டும் வெடித்தது.
எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறியதால், அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 150க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று (ஜனவரி 15) அதிகாலை 6.21 மணியளவில் எரிமலை வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் மராபி மலையில் வெடிப்பு ஏற்பட்ட போது, எரிமலையில் நடைபயணம் மேற்கொண்ட 75 பேரில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.