அடிலெய்டின் வடக்கே ஜேம்ஸ்டவுனில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அடிலெய்டும் அதை உணர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
கிட்டத்தட்ட நூற்று முப்பது பேர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு, ஜேம்ஸ்டவுன் அருகே 1.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலைமையை கண்காணித்து வருவதாக ஆஸ்திரேலிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.