Newsசீனப் பெருஞ்சுவரில் உலகின் மிக நீளமான ஓவியம் வரைந்து சாதனை நிலைநாட்டிய...

சீனப் பெருஞ்சுவரில் உலகின் மிக நீளமான ஓவியம் வரைந்து சாதனை நிலைநாட்டிய பெண்

-

13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் 32ஆவது பகுதி, கலாசார நினைவு சின்னங்களில் ஒன்றாக தற்போதுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சீனப் பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். அவரின் இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சீனப் பெருஞ்சுவரின் மேல் 60 நாட்களுக்கும் மேலாக அமர்ந்து இந்த பிரமிக்க வைக்கும் ஓவியத்தை குவோ ஃபெங் வரைந்துள்ளார். இவர் 1,014 மீற்றர் நீளமுள்ள கேன்வாஸில் ‘காலப்போக்கில் நாகரிகத்தின் வளர்ச்சி’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இவ்வோவியத்தை வரைந்துள்ளார்.

இதுகுறித்த காணொளியை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் இந்த வார இறுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும்...

ஆஸ்திரேலியாவில் பெயரிடப்பட்டுள்ள முதல் 10 பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலிய நிதி மதிப்பாய்வு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சி செயல்முறை, கற்பித்தல், தொழில்முறை முடிவுகள் மற்றும் சமபங்கு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தியுள்ளது. அந்த வகைப்பாட்டின் படி, இந்த வகைப்பாட்டில்...

இந்த கிறிஸ்துமஸில் பிரபலமான கிறிஸ்துமஸ் இனிப்பு கிடைக்காது என தெரிவிப்பு

கிறிஸ்மஸ் சீசனில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான "Celebrations" சாக்லேட் பாக்ஸ் இந்த கிறிஸ்துமஸில் ஆஸ்திரேலிய கடைகளில் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு முதல் "Mars"...

வாக்காளர்களால் மிகவும் விரும்பப்படும் மாநிலப் பிரதமராக ஜான் பெசுட்டோ

விக்டோரியா மாநிலத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுட்டோ, வாக்காளர்களால் மிகவும் விரும்பப்படும் மாநிலப் பிரதமர் வேட்பாளராக மாறியுள்ளார். தி ஏஜ் செய்தி இணையதளத்திற்காக...

கோடை காலம் நெருங்கி வருவதால் பாம்புகள் பற்றி விக்டோரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

வெப்பமான காலநிலை மற்றும் இனவிருத்தி காலம் காரணமாக பாம்புகள் வெளியேறி வருவதாக விக்டோரியா மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நாட்களில்...

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இனி முக்கிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட...