Newsகடும் குளிரால் முடங்கும் அமெரிக்கா

கடும் குளிரால் முடங்கும் அமெரிக்கா

-

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருவதால் -30° செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது.

85 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு நேற்று(16) மின்சாரம் தடைப்பட்டுள்ளது. போர்ட்லாண்ட் அதிகாரிகள் உறைபனி நிலவுவதால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சாலை வழியாக பயணிப்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பனிப்பொழிவால் உறைபனி உருவாகியுள்ளதாகவும் அதன் கனத்தால் மரங்கள் மற்றும் மின்சார இணைப்புகள் சேதமடைந்து விழுவதற்கான அபாயம் குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை, விளையாட்டுப் போட்டிகள், ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரை அனைத்தும் குளிரால் பாதிப்படைந்துள்ளது.

சிகாகோ, போர்ட்லாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேற்று(16) விடுமுறை விடப்பட்டுள்ளது.

தனியார் அமைப்பு 2,900க்கும் அதிகமான விமான பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக நேற்று முன்தினம்(15) தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தின் மத்தியில் வெப்பநிலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய குளிர் அலை ஒன்று வடக்கு மற்றும் மத்தியமேற்கு பகுதி வழியாக வாரக் கடைசியில் தெற்கு நோக்கி செல்லும் எனக் கணிக்கப்படுகிறது.

Latest news

உலகின் மிகவும் ஆபத்தான 20 நகரங்களில் ஆஸ்திரேலிய நகரம்

ஆஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் 2024 ஆம் ஆண்டில் உலகின் 20 மிகவும் ஆபத்தான நகரங்களின் சமீபத்திய தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில நகரங்கள் அழகான...

இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரம் பறந்த குவாண்டாஸ் விமானம்

பராமரிப்பு பணியின் போது பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களால் இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரத்திற்கும் மேலாக பறந்த குவாண்டாஸ் விமானம் தொடர்பான தகவல்...

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...