70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமத்தை கண்டுபிடிப்பதில் ஆஸ்திரேலிய மாணவர் ஒருவர் பங்களித்துள்ளார்.
நியூ இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்று வரும் நாதன் என்ரிக்வெஸ், மங்கோலியாவில் உள்ள கோபி பாலைவனத்தில் மூன்று வாரங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
அங்கு, அவரும் அவரது குழுவினரும் சுமார் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவத்தை கண்டுபிடிக்க முடிந்தது, மேலும் அது நெமடோசொரஸ் இனத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெமடோசொரஸ் புதைபடிவம் 1970 களில் போலந்து குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.
டைனோசர் படிமங்கள் அதிக அளவில் புதைந்து கிடக்கும் கோபி பாலைவனத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட முடிந்தது வாழ்வில் மிக முக்கியமான தருணம் என்கிறார் நாதன் என்ரிக்ஸ்.