குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அவசர நிதி உதவிக்கு தகுதியற்றவர்கள் என தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை, ஐம்பத்தேழாயிரத்திற்கும் மேற்பட்டோர் அவசர நிதி உதவி கேட்டனர்.
ஆனால் இருபத்தொன்பதாயிரத்துக்கும் சற்று அதிகமாகவே நிதியுதவி கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரத்து ஐநூறு டாலர்கள் வரை நிதி உதவியும், மூவாயிரத்து ஐநூறு டாலர்கள் வரை பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய சமூக சேவைகள் திணைக்களம், உதவிக்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்று கூறுகிறது.
எனினும், பல உதவிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.
சில சமயங்களில் உதவியை நாடுவோரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாத பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சமூக சேவைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.