Newsகூகுளில் தொடரும் பணிநீக்க நடவடிக்கை

கூகுளில் தொடரும் பணிநீக்க நடவடிக்கை

-

உலகின் முன்னணி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், 2023 ஜனவரி மாதம், சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 12,000 (6 சதவீதம்) பேரை பணிநீக்கம் செய்தது.

“இந்த பணிநீக்க நடவடிக்கை மிகப்பெரியதாயினும் நிறுவன வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது” என கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை அப்போது தெரிவித்திருந்தார்.

2024 ஜனவரி மாதம், மீண்டும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை கூகுள் பணிநீக்கம் செய்தது.

சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, 2024 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

”கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

நமது இலட்சியங்கள் மிக பெரியவை. நமது முன்னுரிமைகளும் அதிகம். இத்தகைய ஒரு இலக்கு உள்ள போது நாம் பெரிய கடினமான முக்கிய முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

அவசியமில்லாத சில பணிகள் நீக்கப்படும். ஆனால், அதன் எண்ணிக்கை கடந்த வருடம் போல் அதிகம் இருக்காது.

இந்நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் நிலவும் அடுக்குகளை(layers) நீக்குவதற்காக எடுக்கப்படுகிறது. சில ஊழியர்களுக்கு இவை முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளன.

சில பணிக்குழுக்களில் ஆண்டு முழுவதும் பணிகளின் அவசியம் குறித்து ஆராயப்பட்டு வரும். அவ்வப்போது சில பணிகள் தேவையற்று போகலாம்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...