Newsபிரபல யூடியூபரின் காணொளி முதன்முறையாக எக்ஸ் தளத்தில்

பிரபல யூடியூபரின் காணொளி முதன்முறையாக எக்ஸ் தளத்தில்

-

உலக அளவில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட். ஜிம்மி டொனால்ட்சன் என்ற இயற்பெயர் கொண்ட இவரது வலைதள காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இலட்சக்கணக்கான பார்வைகளை குவிப்பது வழக்கமானது.

ஆனால் இவர் இதுவரை எக்ஸ் தளத்தில் எந்த காணொளிகளையும் பதிவிட்டது கிடையாது. மிகுந்த பொருட் செலவில் தான் உருவாக்கும் காணொளிகளை அவர் யூ-டியூப்பில் வெளியிட்டு வந்த நிலையில், எலான் மஸ்க், “மிஸ்டர் பீஸ்ட் ஏன் தனது காணொளியை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதில்லை” என கேள்வி கேட்டிறிந்தார்.

அதற்கு மிஸ்டர் பீஸ்ட் அளித்த பதிலில், “என்னுடைய ஒவ்வொரு காணொளியையும் மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கிறேன். எக்ஸ் தளத்தில் அதனை பகிர்ந்தால் காணொளி தயாரிப்பு செலவில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும் என கூறியிருந்தார்.

அவரது இந்த பதிவை எக்ஸ் தள பயனர்கள் பலரும் வரவேற்றனர். இந்நிலையில் எலான் மஸ்க் கோரிக்கையை ஏற்று மிஸ்டர் பீஸ்ட் எக்ஸ் தளத்தில் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார். அந்த காணொளியுடன் அவரது பதிவில், “எக்ஸ் தளத்தில் ஒரு காணொளி எவ்வளவு விளம்பர வருவாயை ஈட்டுகிறது என்று பார்க்க நான் ஆவலாக உள்ளேன். அடுத்த வாரம் விளம்பர வருவாயாயை பகிர்ந்து கொள்கிறேன்” என கூறி இருந்தார். இதை எலான் மஸ்க் இப்பதிவை மறு பகிர்வு செய்து, “மிஸ்டர் பீஸ்ட்டின் முதல் வீடியோ நேரடியாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது” என கூறியிருந்தார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...