Cinema‘அன்னபூரணி’ விவகாரம் குறித்து நடிகை நயன்தாரா வருத்தம்

‘அன்னபூரணி’ விவகாரம் குறித்து நடிகை நயன்தாரா வருத்தம்

-

அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அண்மையில் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் பிராமண பெண்ணான அன்னபூரணியை (நயன்தாரா) அசைவம் சாப்பிட்ட வைப்பதற்காக நாயகன் ஃபர்ஹான் (ஜெய்), “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் இராமரும், இலட்சுமணனும் விலங்குகளை வேட்டையாடி சீதாவுடன் சேர்ந்து உண்டனர்.” என வசனத்தில் குறிப்பிடுவார்.

இந்த வசனத்தால் அன்னபூரணி கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த ஹிந்து அமைப்பின் இணையப் பிரிவினர், இப்படத்தில் இராமர் குறித்து அவதூறாகப் பேசியது மட்டுமல்லாமல் லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாகக் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இப்படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில்,

“எனது நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

‘அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே ‘அன்னபூரணி’ திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும்

துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன்

செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல.

எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...