மெல்போர்ன், கார்ல்டன் நோர்த், பிரின்சஸ் தெருவில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்பக்க கதவில் யாரோ எதையோ எறிந்ததாகவும், அப்போது சிறிய அளவில் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது.
வீடு பெரிய அளவில் சேதம் அடையவில்லை.
கடந்த காலங்களில் விக்டோரியா மாநிலத்தில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.