Newsஅயோத்தி ராமர் கோயிலுக்கு உலகின் மிகப்பெரிய பூட்டு பரிசு

அயோத்தி ராமர் கோயிலுக்கு உலகின் மிகப்பெரிய பூட்டு பரிசு

-

அயோத்தியில் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை நெருங்கிவரும் நிலையில் உலகின் மிகப்பெரிய பூட்டு, 1,265 கிலோ லட்டு பிரசாதம் அயோத்தியை சென்றடைந்தது.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் நிர்மானிக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா நாளை மறுநாள்(22) நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

கோயில் பிரதிஷ்டைக்கான பூஜைகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நன்கொடைகளையும், பரிசுப் பொருள்களையும் அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர்.

அந்தவகையில், 400 கிலோவிலான உலகின் மிகப்பெரிய பூட்டு மற்றும் சாவியை அலிகாரில் இருந்து அயோத்திக்கு சென்றடைந்தன. இந்த பூட்டு இந்து மகா சபா சார்பில் அயோத்தி ராமர் கோயிலுக்குப் பரிசாக வழங்கப்பட்டது.

அலிகார் மாநிலம் நோரங்காபாத்தில் வசிக்கும் சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் அவரது மனைவி ருக்மணி ஷர்மா தம்பதியரால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூட்டு செய்யப்பட்டது. சத்ய பிரகாஷ் சர்மா சமீபத்தில் காலமானார். இந்த பூட்டை அயோத்தி ராமர் கோவிலுக்குப் பரிசளிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்

அதேபோன்று ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராம் கேட்டரிங் சர்வீசஸ் மூலம் 1,265 கிலோ லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவின் AI சட்டம் உங்களை ஏன் என்று யோசிக்க வைக்கிறது?

நீதிமன்ற ஆவணங்களை வரைவதில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது குறித்து வழக்கறிஞர்களுக்கு விக்டோரியன் சட்ட சேவைகள் வாரியம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. AI தவறான வழக்கு மேற்கோள்களை...

வேலைகள் மற்றும் தாய்மையைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா பல வசதிகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கான வேலைப் பாதுகாப்பு மற்றும் விடுப்பு உரிமைகள் குறித்து நியாயமான பணி குறைதீர்ப்பாளன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தேசிய வேலைவாய்ப்பு தரநிலைகளின்படி, கர்ப்ப காலத்தில் ஊதியம்...

MATES விசா விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் MATES விசாவிற்கு விண்ணப்பிக்க இந்திய குடிமக்கள் முதலில் வாக்களிக்கப் பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Mobility Arrangement for Talented Early-professionals...

 முதல் முறையாக ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள விஸ்வாஸ்குமார்

ஜூன் மாதம் 241 பேரைக் கொன்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வஷ்குமார் ரமேஷ், முதல் முறையாக ஊடகங்களுக்குப் பேட்டி...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...