ஆஸ்திரேலியாவில் கடலோர அரிப்பின் எதிர்மறை விளைவுகளை குறைக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
மோசமான வானிலையுடன் உருவான சூறாவளி ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் முழு கடற்கரையோரமும் 34 ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு மேல் பரந்து விரிந்து காணப்படுவதாகவும், முழு கடற்பரப்பும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்ப உத்திகளில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி கரையோரங்களில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கப்படும் பவளப்பாறைகளை சுற்றி கடல் வாழ் உயிரினங்கள் பரவும் என நம்பப்படுகிறது.
கடலின் பல்லுயிர் பெருக்கத்தை பராமரிக்க உதவுகிறது என்று கடல்சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.