ஆஸ்திரேலியாவின் பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் வளர்ந்துள்ளன.
வட்டி விகிதங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும், பல்வேறு தரப்பினர் குறிப்பிட்ட துறைகளில் முதலீடுகளை வழங்குவதை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்துறை, ரியல் எஸ்டேட் மற்றும் நிதித் துறைகளில் பங்கு விலைகள் அதிகரித்துள்ளன.
இது பொருளாதார ரீதியில் நல்லதொரு நிலைமை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் வட்டி விகித மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் சுரங்கம், எரிசக்தி மற்றும் நுகர்வோர் சேவைகள் தொடர்பான விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.