இளைஞர் சமுதாயத்தினரிடையே வேப் பயன்பாடு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வேப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆனால் இளம் சமூகம் தான் மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்று மெல்போர்ன் பல்கலைக்கழகம் கூறுகிறது.
முன்பெல்லாம் புகைப்பிடிப்பதில் இருந்து மக்களைக் காப்பாற்ற விளம்பரங்களும் பயன்படுத்தப்பட்டு அவை பயனுள்ளதாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால் வேப் பயன்பாடு தொடர்பாக செய்யப்படும் விளம்பரங்கள் தற்போதைய இளைஞர் சமூகத்தை பாதிக்கவில்லை என ஆய்வை நடத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இளைஞர் சமூகத்தை புகைப்பிடிப்பதில் இருந்து விடுவிக்க அடுத்த சில ஆண்டுகளில் 364 மில்லியன் டாலர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.