Newsஇலங்கையில் அமைச்சர் ஜீவன் தலைமையில் தேசிய பொங்கல் விழா

இலங்கையில் அமைச்சர் ஜீவன் தலைமையில் தேசிய பொங்கல் விழா

-

இலங்கையில் மலையக வரலாற்றில் முதன்முறையாக, தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் நேற்று (21) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய தைப்பொங்கல் விழா வெற்றிகரமாக நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழா தேசிய ரீதியில் மட்டுமல்ல உலக வாழ் தமிழ் மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிகழ்வுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, அமைச்சுகளின் செயலாளர்கள், நுவரெலியா மாவட்ட அரச அதிபர், அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, மீனாக்சி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோருக்கும் பங்கேற்று மக்களை மகிழ்வித்தனர்.

1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, கோலப்போட்டி, சிலம்பாட்டம், தப்பாட்டம் என பல கலை, கலாசார அம்சங்களுடன் விழா நடைபெற்றது.

மலையக வரலாற்றில் இம்முறையே 1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய பொங்கல் விழா நடத்தப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.

மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கவைப்பதற்கான நகர்வுகளில் மற்றுமொரு அங்கமாக தேசிய பொங்கல் விழா பார்க்கப்படுகின்றது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...