அண்டார்டிக் கடற்கரையில் இருந்து கடந்த 1986ஆம் ஆண்டு ஒரு பெரிய பனிப் பாறை பிரிந்து ஒரு பனித் தீவாக மாறியது.
உலகின் மிகப்பெரிய இப்பனிப்பாறை A23A என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 4,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட இப்பனிப்பாறை, ஒருங்கிணைந்த லண்டன் நகரத்தைவிட இரண்டு மடங்கு பெரியது.
இது அண்டார்டிகாவின் பில்ச்னர் பனிப்பரப்பில் இருந்து பிரிந்த பனிப்பாறைகளின் ஒரு பகுதியாகும்.
இப்பனிப்பாறை கடந்த 2022ஆம் ஆண்டு முதல் வேகமாக நகரத் தொடங்கியது. இந்நிலையில் A23A பனிப்பாறை வடக்கு நோக்கி செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்து அண்டார்டிக் சர்வேயின் ஆண்ட்ரூ பிளெமிங் கூறும் போது, “2020ஆம் ஆண்டில் செயற்கைக்கோள் படங்கள் மூலம் நகருவது தெரிந்தது.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில், A23A அதன் பனிக்கட்டிகளில் இருந்து விடுபட்டு வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கியது” என்றார்.
நன்றி தமிழன்