அவுஸ்திரேலியாவும் ஹமாஸ் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க சம்மதிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்காவும் பிரிட்டனும் முடிவு செய்துள்ளன.
மேலும், ஹமாஸ் அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய பல செயற்பாட்டுக் குழுக்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸுடன் தொடர்புடைய 12 நபர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளும் ஹமாஸின் நிதி ஸ்திரத்தன்மைக்கு சவால் விடுவதாக நம்பப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பினர் பணம் வசூலிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், கிரிப்டோகரன்சிகள் போன்றவற்றின் பயன்பாடும் வளர்ந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், அவர்கள் மீது பல்வேறு துறைகளில் இருந்து தடைகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பென்னி வோங் கூறுகிறார்.