விக்டோரியா மாகாணத்தில் உள்ள சோரன்டோவை சுற்றியுள்ள கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நான்கு மீட்டர் நீளமுள்ள வெள்ளை சுறா கடல் பகுதியில் சுற்றித் திரிவது உறுதி செய்யப்பட்டது.
இதன்படி குறித்த பிரதேசத்தை சுற்றியுள்ள கரையோர பகுதிகளுக்குள் பிரவேசிக்க வேண்டாம் என விக்டோரியா கடற்றொழில் அதிகார சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த வெள்ளை சுறாவை யாராவது அவதானித்திருந்தால், அது குறித்து விக்டோரியா அவசர சேவைக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சுறா மீனின் நடத்தையை கண்காணிக்க பொறுப்பான தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடற்றொழில் அதிகாரசபை தெரிவித்துள்ளது.