Sportsமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T-20 தொடரின் அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T-20 தொடரின் அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

-

மேற்கிந்திய தீவுகள் அணி 3 வடிவ கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட்டில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று 25ம் திகதி தொடங்குகிறது.

இரு டெஸ்ட் தொடருக்கு பிறகு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட T-20 தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள்அணிக்கு எதிரான T-20 தொடரில் இடம்பெற்ற 14 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் அணித்தலைவராக மிட்செல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வார்னர், மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பியுள்ளனர். பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

T-20 அணிக்கான அவுஸ்திரேலிய அணி:-

மிட்செல் மார்ஷ் (அணித்தலைவர்)

சீன் அபோட்

ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

டிம் டேவிட்

நாதன் எல்லிஸ்

ஜோஷ் ஹேசில்வுட்

டிராவிஸ் ஹெட்

ஜோஷ் இங்கிலிஸ்

கிளென் மேக்ஸ்வெல்

மாட் ஷார்ட்

ஸ்டோனிஸ்

மேத்யூ வேட்

டேவிட் வார்னர்

ஆடம் ஜாம்பா

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...