ஆண்டுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை குறைக்க கனடா தயாரா?
2025ஆம் ஆண்டு கனடாவிற்கு கல்விக்காக வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 35 வீதத்தால் குறைக்கப்படும் என அந்நாட்டு குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கனடாவில் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளும் கட்டணங்களை கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கல்வித் தரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு வரவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு அமைச்சர் வலியுறுத்தியுள்ளமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, கடந்த வருடத்தில் சுமார் 364,000 மாணவர்கள் கனடாவிற்கு கல்விக்காக வந்துள்ளனர்.
இருப்பினும், முதுகலை மற்றும் பிஎச்டி விண்ணப்பதாரர்கள் இந்தக் கட்டுப்பாடுக்கு உட்பட்டவர்கள் அல்ல.