அவுஸ்திரேலியாவின் பழங்குடியின மக்களின் நலனுக்காக அவுஸ்திரேலியா தினத்தை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பல பேரணிகள் பழங்குடியின மக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மெல்போர்னின் மாநில பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு பெரிய கூட்டம் கூடி, ஜனவரி 26 ஐ அதிகாரப்பூர்வமாக துக்க நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரியது.
அவுஸ்திரேலியாவுக்கு வெளிநாட்டவர்கள் வந்திறங்கிய நாளை அவுஸ்திரேலியா தினமாகக் கொண்டாடுவது பொருத்தமற்றது என நினைக்கிறார்கள்.
அதற்கு முன் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த ஆதிவாசிகள் அங்கு புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவேதான் ஆஸ்திரேலிய தினத்தை மாற்ற வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறுகின்றனர்.