ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அவுஸ்திரேலிய நீச்சல் வீரர் மேக் ஹார்டன், பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு போட்டி நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக எதிர்பாராத விதமாக அறிவித்துள்ளார்.
ஊக்கமின்மையே தனது முடிவுக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டில் தொடர்வதற்கான உந்துதல் இனி தனக்கு இல்லை என்று கூறினார். இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இவர், டோக்கியோ 2020, ரியோ 2016 விளையாட்டுகள் இரண்டிலும் போட்டியிட்டார்.
அவர் தனது முதல் ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீற்றர் ஃப்ரீஸ்டைலில் தங்கப் பதக்கம் வென்றார், அதே நேரத்தில் ஜப்பானில் நடந்த 4×200 மீற்றர் ஃப்ரீஸ்டைல் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
உலக சம்பியன்ஷிப், பான் பசிபிக் சம்பியன்ஷிப்,காமன்வெல்த் விளையாட்டுகளில் பல பதக்கங்களை வென்றார்.