Newsமூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புகள் - ஐ.நா. பொதுச் சபை...

மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புகள் – ஐ.நா. பொதுச் சபை தலைவா் எச்சரிக்கை

-

செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இத்தாக்குதல் தொடா்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் நேற்று(24) எச்சரித்தாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 78ஆவது அமா்வின் தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ், இந்தியாவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக கடந்த திங்கட்கிழமை(22) சென்றார்.

இதற்கிடையே செய்தி நிறுவனமொன்றுக்கு அவா் கடந்த 24ம் திகதி அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: செங்கடலில் தொடா்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இத்தாக்குதல் தொடா்ந்தால் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக் கூடும். செங்கடலில் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தொடங்கிய தாக்குதலுக்கு மூன்றாம் தரப்பினா் உதவுவதுபோலுள்ளது. எனவே சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது.

அதேபோல் காஸா பிரச்னைக்கு அமைதி வழியே தீா்வு. இஸ்ரேல்-பலஸ்தீனம் என இரண்டும் தனிநாடுகளாக செயல்பட வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...