Newsமோனாலிசா ஓவியத்தை சேதப்படுத்திய பெண்கள் – பிரான்ஸில் பரபரப்பு

மோனாலிசா ஓவியத்தை சேதப்படுத்திய பெண்கள் – பிரான்ஸில் பரபரப்பு

-

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 ஆம் நூற்றாண்டில் ஓவியர் லியோனார்டோ டா வின்சி(Leonardo da Vinci) அவர்களால் வரையப்பட்ட உலக புகழ்பெற்ற மோனா லிசா (Mona Lisa) ஓவியம் பிரான்ஸின் தலைநகர், பரிஸ் உள்ள லூவ்ரே(Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் பாதுகாப்பாக மோனா லிசா ஓவியம் வைக்கப்பட்டு இருப்பதால் இந்த சம்பவத்தின் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெளியான இரண்டு பெண்கள் ஓவியத்தின் மீது சூப் ஊற்றுவதை பார்க்க முடிகிறது.

மேலும், தாக்குதல் பிறகு ஓவியத்தின் முன் நின்று கொண்டு ‘ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு’ உரிமை வேண்டும் என்றும், நமது விவசாய முறை நோய்வாய்ப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தனர்.

தாக்குதல் நடந்த உடனடியாக அருங்காட்சியக பொறுப்பாளர்கள் ஓவியத்தை கருப்பு துணி கொண்டு மூடியுள்ளனர். இவ்வோவியம் இதற்கு முன்பாகவும் பலமுறை சேதப்படுத்தப்பட்டும், ஒருமுறை திருடப்பட்டுமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஒரு பெரிய ஆஸ்திரேலிய வங்கியிடமிருந்து சாதனை லாபம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கடன் மற்றும் வைப்பு நிறுவனமான Commonwealth வங்கி, 2024/25 நிதியாண்டில் ஆண்டுக்கு $10.25 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு வீட்டு உரிமையாளர்கள் மற்றும்...

விக்டோரியாவில் கார் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். புதன்கிழமை மாலை 6 மணியளவில் Moe-இல் உள்ள Lloyd தெருவிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. இன்னும்...

Perisher Ski Resort-இல் உயிரிழந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்

Southern Hemisphere Winter-இற்காக ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் அமெரிக்கர் ஒருவர் Perisher Ski Resort-இல் ஏற்பட்ட விபத்தில் கொல்லப்பட்ட பனிச்சறுக்கு வீரர் என பெயரிடப்பட்டுள்ளார் . Jindabyne-இற்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள NSW...

NSW தெற்கு கடற்கரையில் மின்தடையால் பாதிக்கப்பட்ட Telstra வாடிக்கையாளர்கள்

நியூ சவுத் கோஸ்ட்டில் 100,000க்கும் மேற்பட்ட சேவைகள் பெரிய அளவிலான மின்தடையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, Telstra சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று மதியம் 1.45 மணியளவில், ஒரு...

NSW தெற்கு கடற்கரையில் மின்தடையால் பாதிக்கப்பட்ட Telstra வாடிக்கையாளர்கள்

நியூ சவுத் கோஸ்ட்டில் 100,000க்கும் மேற்பட்ட சேவைகள் பெரிய அளவிலான மின்தடையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, Telstra சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று மதியம் 1.45 மணியளவில், ஒரு...

மெல்பேர்ணில் பாதசாரிகள் மேல் மோதிய கார் – இருவர் காயம்

நேற்று மெல்பேர்ணின் CBD- யில் ஒரு கார் நடைபாதையில் ஏறி, ஒரு பாதசாரி மீது மோதி, ஒரு கடையின் முன்பக்கத்தில் மோதியதில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீல...