Newsயாசகர்களை ஒழிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள முக்கிய நாடு

யாசகர்களை ஒழிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள முக்கிய நாடு

-

இந்தியாவின் 30 நகரங்களில் யாசகர்கள் இல்லாத நிலையை எட்டுவதற்கு இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநகரங்களில் யாசகம் கேட்கும் பெரியவர்கள், குழந்தைகள் பெண்களுக்கு மறுநிவாரணம் வழங்கி, அவர்கள் மரியாதைக்குரிய வாழ்வை மேற்கொள்ள வழி ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தத் துறை சார்பில், மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு உதவியளித்து, நகரப் பகுதிகளில் யாசகர்கள் அதிகம் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, வரும் 2026ஆம் ஆண்டுக்குள் யாசகர்கள் இல்லாத நகரங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த நகரங்களின் பட்டியலில் மேலும் பல நகரங்கள் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதலில், நாட்டின் மத ரீதியான, வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் பெற்ற நகரங்களைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 30 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறைந்தபட்ச தனிநபர் வாழ்முறைக்கான ஆதரவளிக்கும் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியா ஒரு குற்றவியல் மோசடி மையமா? – ஐ.நா. எச்சரிப்பு

தென்கிழக்கு ஆசியாவிலிருந்து பசிபிக் பெருங்கடலில் ஒரு புதிய எல்லைக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற மோசடி மையங்கள் நகர்ந்து வருவதற்கான சான்றுகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஆசிய...

அமெரிக்காவின் H-1B விசா திட்டத்திற்கான கட்டணத்தில் திருத்தம்

திறமையான விசாக்களுக்கு வருடாந்திர கட்டணம் விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, H-1B தொழிலாளர் விசாக்களுக்கு நிறுவனங்கள் ஆண்டுக்கு US$100,000 செலுத்த வேண்டும். இந்த...

தனி நாடாக அங்கீகரிக்கப்பட்ட பலஸ்தீனம்

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா அரசுகள் அறிவித்துள்ளன. இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் செப்டெம்பர் 21 வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஞாயிற்றுக்கிழமை...

புவி வெப்பமடைதலுக்கு ஏற்ப ஆடைகளை வடிவமைக்கும் விஞ்ஞானிகள்

ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வெப்பமான காலநிலையைத் தாங்கக்கூடிய ஒரு வகை குளிர்ச்சியான ஆடைகளை உருவாக்கியுள்ளனர். மேம்பட்ட ஜவுளி தொழில்நுட்பங்களில் நிபுணரான பேராசிரியர் டஹுவா சோவ், ஆராய்ச்சிக்கு...

டிரம்பை எதிர்கொள்ள நாட்டை விட்டு வெளியேறுகிறார் அல்பானீஸ்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்குப் புறப்பட்டார். செவ்வாயன்று டிரம்ப் வழங்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமரும் கலந்து...

குறைந்தபட்ச ஊதியம் $34.45 உடன் 1300 புதிய வேலைகள்

பண்ணைகளில் அறுவடை காலம் நெருங்கி வருவதால், உணவு சேகரிப்பு மற்றும் சேமிப்பிற்கு உதவுவதற்காக ஒரு நிறுவனம் 1,300க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. GrainCorp மூன்று முக்கிய பகுதிகளில்...