Newsஅயோத்தியில் அதிகரிக்கும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

அயோத்தியில் அதிகரிக்கும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

-

ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை கடந்த 22ஆம் திகதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமா் மோடி முன்னிலையில் நடைபெற்ற பிரதிஷ்டை நிகழ்வில் 8,000க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்றனா். பிரதிஷ்டை நிகழ்வைத் தொடா்ந்து, தரிசனத்துக்காக கடந்த 23ஆம் திகதிமுதல் பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

வார இறுதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 இலட்சத்துக்கும் மேல் பக்தா்கள் அயோத்திக்கு வந்து ராமா் கோயிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களிலும், ராமா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் பன்மடங்கு பெருகியுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் உயரும் என உள்ளூா் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக உத்தர பிரதேச மாநில தொழிலாளா் நலத்துறை அமைச்சா் அனில் ராஜ்பா் கூறுகையில், ‘அடுத்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையை மையப்படுத்தி அயோத்தியில் குறைந்தது 5 இலட்சம் நேரடி அல்லது மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, அயோத்தி இளைஞா்கள் பலா் தொழில்முனைவோராக மாற வாய்ப்புள்ளது. தேவை பெருகுவதால் சிறு வணிகா்களின் வா்த்தகம் விரிவடையும். வேலைவாய்ப்பில் உள்ளூா் இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி, அடுத்த 2 ஆண்டுகளில் அயோத்தியில் செயல்பாட்டைத் தொடங்கவிருக்கும் 10க்கும் மேற்பட்ட சா்வதேச நட்சத்திர விடுதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை எளிதாக்க, அயோத்தி மாநகராட்சியுடன் இணைந்து எங்கள் துறை பணியாற்றி வருகிறது’ என்றாா்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் பரவும் புதிய நோய் – சுகாதார அவசரநிலை அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் பரவும் நிமோனியா வகை நோயினால் அரசு சுகாதார அவசரநிலை அறிவித்துள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 5 பேருக்கு...

Ceiling insulation-இற்காக விக்டோரியன் அரசாங்கத்திடமிருந்து மானியம்

விக்டோரியன் வீடுகளில் Ceiling காப்புக்கு மானியங்கள் வழங்கும் திட்டங்களை விக்டோரியன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் $3,000 முதல் $1,500 வரை தள்ளுபடியை வழங்கும் என்றும், வீடுகளுக்கு...

பணம் செலுத்தும் திகதிகள் குறித்து Centrelink அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள Centrelink பெறுநர்களுக்கு ஈஸ்டர் மற்றும் Anzac விடுமுறை நாட்கள் காரணமாக பணம் பெற வேண்டிய திகதிகள் மற்றும் நேரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஈஸ்டர்...

ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனத்திற்கு $750,000 அபராதம்

ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனம் ஒன்று பணியில் இருந்தபோது ஏற்பட்ட கடுமையான விபத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்திற்கு $750,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு...

11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா திரும்புகிறார் லேடி காகா

லேடி காகாவின் MAYHEM Ball உலக சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய நிகழ்ச்சி அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சிகள் டிசம்பர் 5 ஆம் திகதி மெல்பேர்ணின் Marvel...

தேர்தலில் ஒரு முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ள புலம்பெயர்ந்தோர்

2025 கூட்டாட்சி தேர்தல் விவாதங்கள் புலம்பெயர்ந்தோர் பற்றிய கட்டுக்கதைகளையும் தவறான தகவல்களையும் நிலைநிறுத்துகின்றன என்று ஆஸ்திரேலிய மனித இடம்பெயர்வு நிபுணர் ஒருவர் கூறுகிறார். ஆஸ்திரேலிய மனித இடம்பெயர்வு...