Cinemaவிரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போகும் எமி ஜாக்சன்

விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப்போகும் எமி ஜாக்சன்

-

தமிழில் ‘மதராசபட்டினம்’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் தொடர்ந்து ஷங்கரின் ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி போன்ற படங்களில் நடித்தார்.

நீண்ட நாட்கள் கழித்து அருண் விஜய்யின் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை எமி நிச்சயதார்த்தம் செய்தார். இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனவும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆனால், திருமணத்திற்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

தொடர்ந்து, எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார். இருவரும் இந்தியாவுக்கு வந்து, எமி ஜாக்சனின் படப்பிடிப்புகளிலும் அவர் குழந்தை ஆண்ட்ரியாஸூடன் கலந்துகொண்டார்.

இந்நிலையில், எட் வெஸ்ட்விக் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்த புகைப்படத்தைப் பகிர்ந்த எமி ஜாக்சன், அதற்கு ஒப்புக்கொண்டதையும் அறிவித்திருக்கிறார். இதன் மூலம், விரைவில் எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...