Newsமனிதாபிமான உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காசா

மனிதாபிமான உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காசா

-

காசா பகுதியில் மனிதாபிமான உதவிகளை பேணுவது தற்போது நெருக்கடியான சூழ்நிலையாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்களின் நிதிகள் தீர்ந்துவிட்டதாக நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

ஹமாஸ் தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணத் திட்ட ஊழியர்கள் பலர் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதை அடுத்து, இதுவரை உதவி வழங்கிய ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 8 நாடுகள் தங்களது நிதியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தன.

அந்த நிலையைக் கருத்திற் கொண்டு காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளுக்கு நன்கொடை வழங்குமாறு சர்வதேச சமூகத்திடம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இருபத்தைந்து ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், காஸா பகுதியில் உள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

அவசரமாக தரையிறக்கப்பட்ட பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற குவாண்டாஸ் விமானம்

பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற குவாண்டாஸ் விமானம் அவசரநிலை காரணமாக மாலைத்தீவில் எதிர்பாராத விதமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.35 மணிக்கு பெர்த் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட...

Koala துப்பாக்கிச் சூடு குறித்து விக்டோரியா அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை

விக்டோரியன் தேசிய பூங்காவில் கோலாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. Budj Bim தேசிய பூங்காவில் ஏற்பட்ட தீ...

விக்டோரியாவில் இறந்து கிடந்த நூற்றுக்கணக்கான Corellas

விக்டோரியாவின் ஹார்ஷாமில் நூற்றுக்கணக்கான இறந்த Corellas கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பறவைகள் விஷம் குடித்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை , Wimmera நதிக்கு அருகில் சுமார் 50...

விக்டோரியா காவல்துறையின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்ட வெளிநாட்டவர்

நியூசிலாந்து முன்னாள் காவல் ஆணையர் Mike Bush, விக்டோரியா காவல்துறையின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 27 அன்று பதவியேற்பார். விக்டோரியா காவல்துறையில் ஏற்பட்ட தலைமை...

விக்டோரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவகை விஷ காளான்

இந்த பருவத்தில் உருவாகி வரும் ஒரு கொடிய காளான் குறித்து விக்டோரிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரமான மற்றும் குளிர்ந்த காலநிலையில் தோன்றும் மஞ்சள் புள்ளிகள் கொண்ட...

உலகின் சிறந்த மருத்துவர்களாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

உலகின் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியா ஒரு உயர் இடத்தைப் பிடித்துள்ளது. சுகாதாரப் பராமரிப்பு என்பது ஒரு உன்னதமான தொழில், இது பல வருட கல்வி...