Newsவேலை நாட்களை குறைக்கும் திட்டத்தில் ஜெர்மனி

வேலை நாட்களை குறைக்கும் திட்டத்தில் ஜெர்மனி

-

உலகில் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடிக்கின்றன. பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த வேலை நேரங்கள் பரவலாக கடைபிடிக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனியும் இணைந்துள்ளது.

ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீழ புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. வரும் பெப்ரவரி 1 முதல், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறையும், நான்கு நாட்களுக்கு வேலையும் செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது.

பல தொழிலாளர் சங்கங்கள் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என வாதித்து வந்த நிலையில் அமுலுக்கு வரவிருக்கும் இந்த சோதனை நடைமுறை, நற்பிரதிபலன்களை அளிக்கும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இந்த சோதனையில் ஜெர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜெர்மனியில் மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்தித் திறனை அதிகரிப்பதன்மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்னையும் தீர்வுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...