Cinemaஇசையமைப்பாளராக அறிமுகமாகும் லிடியன் நாதஸ்வரம்

இசையமைப்பாளராக அறிமுகமாகும் லிடியன் நாதஸ்வரம்

-

மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயகனான மோகன்லால், ஜில்லா, இருவர், காப்பான் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இவர் தற்போது மலையாளத்தில் மலைக்கோட்டை வாலிபன், லூசிபர் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மோகன்லால் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். அதுகுறித்த அறிவிப்பை கடந்த மாதம் புத்தாண்டு தினத்தில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டார். ‘பாரோஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் லிஜொ புன்னோஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆப் தி காமா’ஸ் டிரெசர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சி, கோவா பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் மூலம் லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...