போலந்து நாட்டில் உலக சாதனைக்காக பனிக்கட்டிகளால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் முழு உடலுடன் நிற்கும் போட்டியில் கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா எனும் 43 வயதுடைய பெண் , குறித்த பெட்டிக்குள் 3 மணி நேரம் 6 நிமிடம் 45 நொடிகள் நின்று கின்னஸ் சாதனை படைத்தார்.
இச்சாதனை குறித்து கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா கூறியதாவது:-
இதுபோன்ற பனிக்கட்டி தொடர்பான போட்டிகளில் கலந்துகொள்ள எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதற்கு மன வலிமை, உடல் வலிமை அவசியம் தேவை.
இதுபோல் மற்ற பெண்களும் தாங்கள் விரும்பும் துறைகளில் சாதிக்க முயற்சிக்க வேண்டும் என அவர் கூறினார்.
நன்றி தமிழன்