NoticesTamil Community Eventsதமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024

-

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024 இம்முறை வெகுசிறப்பாக Nunawarding Community Hub & Tunstall Park இல் சுமார் 5000இற்கும் மேலான தமிழ் மற்றும் பல்லின கலாசார மக்களின் பங்குபற்றலுடன், இருபது(20) அமைப்புகளின் பங்களிப்பில் பிரம்மாண்டமாக நடந்தேறியது.

2011ம் ஆண்டில் கேசி தமிழ் மன்றத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொங்கல் நிகழ்வு பல பரிமாண வளர்ச்சிபெற்று, பின்னர் எல்லா அமைப்பினரும் பங்குபற்றும் ஒரு பெரும் பொங்கல் நிகழ்வாக மாற்றவேண்டும் என்ற கேசி தமிழ் மன்றத்தின் பெரும் எண்ணத்தின்பால் 2019ம் ஆண்டில் கேசி தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா, ”தமிழர் திருநாள் அவுஸ்திரேலியா” எனப் பெயர்மாற்றம் பெற்று கேசி தமிழ் மன்றம் பல சமுக அமைப்புக்களின் பங்களிபில் இன்று மிகப்பெரிய தமிழர் அடையாள நிகழ்வாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலை 9:30 மணிக்கு மெல்போனின் எல்லாப் பக்கங்களிலும் இருந்து காலைவேளையில் வந்த சுமார் 30இற்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளுடன் ஊரெல்லாம் கூடி ஆரம்பமாகிய பொங்கல், கும்மியாட்டம் மற்றும் பறை இசையுடன் களைகட்டி பார்வையாளர்களுக்கு தமிழ் உணர்வைத் தட்டிஎழுப்பியது.

பின்னர் உள்ளரங்க, வெளியரங்க நிகழ்வுகள் மற்றும் தமிழர் விளையாட்டான சடுகுடு , கிளித்தட்டு , அங்காடிகள், சிறுவர் விளையாட்டு ( Kids Rides) , மிருக பண்ணை என பார்க்கும் இடம் எல்லாம் விழக்கோலம்பூண்டிருந்தது. இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் என எல்லோரும் மிக ஈடுபாட்டுடன் தமிழர் விளையாட்டில் ஆர்வமாக பங்குபற்றி விளையாட்டுத்திடலைச் சூழ்ந்திருந்த மக்களை மகிழ்வித்து ஆரவரத்துடன் கொண்டாடினார்கள். தமிழர் பாரம்பரியம் வருகின்ற தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது என்ற மன நிறைவு தோன்றியுள்ளது.

உள்ளரங்கில் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட புகைப்பட , ஓவிய , புத்தக கண்காட்சியும்,குழந்தைகளுக்கான முகப் பூச்சு , மண்பானை செய்தல், பாணக்கு வர்னம் தீட்டுதல், கீழடி கண்காட்சி, தேனீர்க்கடை, மற்றும் பல நிகழ்வுகளும் சிறுவர்கள் பெரியவர்கள் என எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது

இதுமட்டுமல்லாது கேசி தமிழ் மன்றத்தின் அரையாண்டு மலர் இளவேனிலின் 25ஆவது இதழ் வெளியிடப்பட்டது. கடந்த 3 இதழ்கள் அவுஸ்திரேலிய தமிழ் பேசும் மக்களிடையே எழுந்த, நாம் கேட்கத் தவறிய, அல்லது கேட்க விரும்பாத குரல்களைக் கொண்ட இதழ்.

வெளியரங்க மேடையில் தமிழ், Bulgarian, கிழைத்தேய மேலைத்தேய இசை நிகழ்வு, தமிழர் பாரம்பரிய கிராமிய நடனம், பரத நாட்டியம், வீணை , தமிழர் இசை என சுமார் 5 மணி நேரம் இடைவிடாத நிகழ்வுகள் மக்கள் வெள்ளத்தில் இடம்பெற்றது. இப்பகுதி நாம் இதுவரை கானாத , சந்திக்காத ஒரு பிரம்மாண்ட தோற்றத்தை எற்படுத்தியது, பார்க்கும் இடம் எல்லாம் கலாசர உடையில் இளைஞர்கள் , யுவதிகள், சிறுவர்கள், முதியவர்கள் என கூட்டம் களைகட்டி கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்.

Latest news

தேசியக் கொடியை மாற்றுவது குறித்து பொதுமக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு

பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியக் கொடியை அப்படியே வைத்திருக்க விரும்புவதாக சமீபத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. ராய் மோர்கன் 1312 ஆஸ்திரேலியர்களைப் பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார், அவர்களில் 61...

ஆஸ்திரேலியாவில் வீடு வாங்க குறைந்தது 11 வருடங்கள் பணத்தைச் சேமிக்க வேண்டும்

வாழ்க்கைச் செலவு காரணமாக ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய வாடகை வீடுகள் மற்றும் அடமான மன அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. CoreLogic அறிக்கைகளின்படி, ஆண்டு...

ஆஸ்திரேலியாவின் பணக்கார தனியார் பள்ளிகளுக்கு சைபர் அச்சுறுத்தல்

சைபர் குற்றவாளிகள் ஆஸ்திரேலியாவில் பணக்கார தனியார் பள்ளிகளை குறிவைப்பது அதிகரித்து வருவதாக சைபர் உளவுத்துறையின் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது. அதன் வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அறிக்கையை வெளியிடுவதில்,...

Protection Visa உள்ள அனைவருக்கும் ஆஸ்திரேலியா PR கிடைக்குமா? – சிறப்பு விளக்கம்

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம், புலம்பெயர்ந்தோருக்கு Protection Visa (Subclass 866) தொடர்பாக ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Protection Visa (Subclass 866) அகதிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்...

ஆஸ்திரேலியாவின் பணக்கார தனியார் பள்ளிகளுக்கு சைபர் அச்சுறுத்தல்

சைபர் குற்றவாளிகள் ஆஸ்திரேலியாவில் பணக்கார தனியார் பள்ளிகளை குறிவைப்பது அதிகரித்து வருவதாக சைபர் உளவுத்துறையின் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது. அதன் வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அறிக்கையை வெளியிடுவதில்,...

Protection Visa உள்ள அனைவருக்கும் ஆஸ்திரேலியா PR கிடைக்குமா? – சிறப்பு விளக்கம்

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம், புலம்பெயர்ந்தோருக்கு Protection Visa (Subclass 866) தொடர்பாக ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Protection Visa (Subclass 866) அகதிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்...