Newsஐஸ்லாந்தில் பெருக்கெடுத்தது எரிமலைக்குழம்பு- சுமார் 3800 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

ஐஸ்லாந்தில் பெருக்கெடுத்தது எரிமலைக்குழம்பு- சுமார் 3800 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

-

வட ஐரோப்பாவில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தின் தலைநகரான ரெக்ஜெவிக், பனிப்பாறைகளாலும், எரிமலைகளாலும் சூழ்ந்து காணப்படுகின்றது.

சில தினங்களுக்கு முன், இந்நாட்டின் க்ரிண்டாவிக் (Grindavik) பகுதியில் எரிமலைக்குழம்பு பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

இதையடுத்து, அப்பகுதியில் வாழ்ந்த சுமார் 3800 பேர், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இம்முறை க்ரிண்டாவிக் பகுதியில் எரிமலை குழம்பு மொத்த ஊரையும் நாசம் செய்து விட்டதால், மீண்டும் அங்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நகரின் பல இடங்களில் நீண்ட தூரத்திற்கு பூமியில் பிளவு ஏற்பட்டு அதிலிருந்தும் லாவா வெளியேறியது. க்ரிண்டாவிக் பகுதிக்கு அருகே உள்ள ஸ்வார்ட்ஸெங்கி புவிவெப்ப மின் நிலையத்திற்கு (geothermal power plant) உள்ளே லாவா செல்வதை தடுக்கும் வகையில், அதற்கு வெளியே அரசு, தடுப்புகள் அமைத்துள்ளது. இந்நகரின் 3 வீடுகளை லாவா மூழ்கடித்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இயற்கையின் சீற்றத்தால் வீடுகளை விட்டு வெளியேறி மீண்டும் குடிபுக முடியாத நிலையில் உள்ள மக்களில் பலருக்கு வீடுகளின் பேரில் வங்கி கடன் உள்ளதால், தங்கள் வாழ்வாதாரம் குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Latest news

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...