மெல்போர்னில் உள்ள 57 மாடி கட்டிடத்தில் உதவியின்றி ஏறிய நபர் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இன்று காலை 7 மணியளவில் கட்டிடத்தின் மீது ஏறத் தொடங்கிய அவர், காலை 8 மணியளவில் உச்சியை அடைந்தார், அங்கு அவர் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களால் மீண்டும் கீழே கொண்டு வரப்பட்டார்.
இச்சம்பவத்தை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்துக் கொண்டிருந்த மற்றுமொரு நபர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
180 மீற்றர் உயரமான கட்டிடத்தின் மீது 29 வயதுடைய இளைஞன் ஏறியுள்ளதாகவும் அவர் மலையேறுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எவ்வித பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாமல் இவ்வாறான அபாயகரமான கட்டிடத்தில் ஏறுவது ஆபத்தானது எனவே சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.