தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
இக்காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதனை சுற்றியுள்ள எஸ்ட்ரெல்லா, நவிடாப் ஆகிய பகுதிகளுக்கும் இந்த தீ பரவியது. இதில் அங்குள்ள 1,200 வீடுகள் எரிந்து நாசமாகின.
இந்தநிலையில் சிலியில் எரியும் காட்டுத் தீயினால் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. வேகமாக பரவி வரும் இந்த தீயை அணைப்பது சவாலாக உள்ளது. எனவே தீயை அணைக்கும் பணியில் மீட்பு படையினருக்கு உதவும்படி பொதுமக்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீ காரணமாக இனிவரும் நாட்களில் வெப்பநிலை 104 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.