சிட்னி முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் 30,000 சட்டவிரோத மின்னணு சிகரெட்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை மற்றும் பல சுகாதார சேவை குழுக்கள் கடந்த ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை இந்த அவசர சோதனைகளை நடத்தியது.
சட்டவிரோத இலத்திரனியல் சிகரெட்டுகளுக்கு மேலதிகமாக, அதிக அளவு நிகோடின் கொண்ட 118,000 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிகரெட் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட 45 கிலோ மூலப்பொருட்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளின் பெறுமதி 1.1 மில்லியன் டொலர்கள்
குறித்த கடைகளின் இரகசிய இழுப்பறைகளில் சட்டவிரோதமான சிகரெட்டுகள் பதுக்கி வைத்திருப்பது சோதனையின் போது தெரியவந்துள்ளது.
ரெய்டுகள் விரிவுபடுத்தப்படும் என்றும், புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இளைஞர்களுக்குக் கற்பிக்க ஒரு திட்டம் உருவாக்கப்படும் என்றும் மாநில சுகாதார அமைச்சர் ரியான் பார்க் கூறினார்.