மறைந்த செஸ் வீரர் மிர் சுல்தான் கான் பாகிஸ்தானின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
அவர் இறந்து 58 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு இந்த பட்டத்தை உலக செஸ் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.
மிர் சுல்தான் 1929, 1931 ,1931ம் ஆண்டுகளில் பிரிட்டிஸ் செஸ் சம்பியன்ஷிப்பை வென்றிருந்தார். அதேபோல், ஃபிராங்க் மார்ஷல் ,சவில் டார்டகோவர் ,முன்னாள் உலக சம்பியனான ஜோஸ் ரவுல் கபாப்லாங்கா போன்ற ஜாம்பவான்களை வென்றுள்ளார்.
மிர் சுல்தான் கான் அப்போது பிரிக்கப்படாத இந்தியா – பாகிஸ்தானில் ஆசியாவின் தலைசிறந்த செஸ் வீரராக திகழ்ந்தார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் இந்தியாவுக்கு விளையாடிருந்தாலும், இப்போது 2024ல் அவருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார்.