பொருளாதார வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவை பொருட்களின் விலைகள், வீட்டு வாடகைகள் மற்றும் போக்குவரத்து போன்ற காரணிகளின் அடிப்படையில் அதிக வாழ்க்கைச் செலவுகளைக் கொண்ட நாடு என்று பெயரிட்டுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலை இருந்தபோதிலும், அதிக ஊதியம் மற்றும் சிறந்த வாழ்க்கை முறையை வாழ்வதற்கான அதிக வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆஸ்திரேலியா நன்மைகளைக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையத்தின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஆலன் ஃபெல்ஸ், ஆஸ்திரேலியாவில் நியாயமற்ற விலைவாசி உயர்வு குறித்து அறிக்கை சமர்பித்திருந்தார்.
மக்கள் செறிந்து வாழும் நாட்டின் தலைநகரங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இருபது வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள வணிகம் மற்றும் நிதிக் கொள்கைகள், வணிகங்களின் விலை நிர்ணயம் போன்றவற்றின் அடிப்படையில் நாட்டில் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
வாழ்க்கைச் செலவு மட்டுமின்றி வணிகச் செலவுகளும் அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் இது ஒரு பின்னடைவு என்று கூறப்படுகிறது.
நுகர்வோரை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த செயல்முறை மிக விரைவாக செய்யப்பட வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.