Newsபுதிய காலநிலை செயற்கைகோளை விண்ணில் செலுத்திய நாசா

புதிய காலநிலை செயற்கைகோளை விண்ணில் செலுத்திய நாசா

-

உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை விரிவாக ஆய்வு செய்வதற்காக பேஸ் என்ற புதிய காலநிலை செயற்கைகோளை நாசா இன்று(08) விண்ணில் செலுத்தியுள்ளது. கேப் கனவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பல்கன் ரொக்கெட் மூலம் ஏவப்பட்ட இச்செயற்கைகோள் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இது, பூமியில் இருந்து 420 மைல்கள் உயரத்தில் பறந்தபடி கடற்பகுதி மற்றும் வளிமண்டலத்தை சுமார் 3 ஆண்டுகள் ஆய்வு செய்யவுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள 3 அறிவியல் கருவிகளில், இரண்டு கருவிகள் மூலம் தினமும் பூமி துல்லியமாக படம்பிடிக்கப்படும். மூன்றாவது கருவி மூலம் மாதாந்திர அளவீடுகள் எடுக்கப்படும்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியை இந்த செயற்கைகோள் தெளிவாக காட்டும் என திட்ட விஞ்ஞானி ஜெர்மி வெர்டெல் தெரிவித்தார்.

சூறாவளி மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக தெரிவிக்கவும், வெப்பநிலை அதிகரிக்கும்போது பூமியின் மாற்றங்களை விவரிக்கவும், தீங்கு விளைவிக்கும் பாசிகள் எப்போது பூக்கும் என்பதை கணிக்கவும் இந்த செயற்கைக் கோள் மூலம் கிடைக்கும் தரவுகள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

Coles கடைகளில் இன்று முதல் கத்தி விற்பனைக்கு தடை

ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Coles-இல் இனி கத்தி விற்பனையை நிறுத்தியுள்ளது. 13 வயது சிறுவன் ஊழியர் ஒருவரை குத்தியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள Coles...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. வெளிநாட்டு தாக்கங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் அச்சுறுத்தலுக்கு...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...