Newsதாய்லாந்து வீதிகளில் சுற்றித்திரிந்த சிங்கக்குட்டி - சாரதி கைது

தாய்லாந்து வீதிகளில் சுற்றித்திரிந்த சிங்கக்குட்டி – சாரதி கைது

-

தாய்லாந்தின் பட்டாயாவில் செல்லமாக வளர்த்த சிங்கக் குட்டியை காரில் ஏற்றிக்கொண்டு வீதி உலா சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவானது, வெள்ளை நிற பென்ட்லி காரின் பின் இருக்கையில் சங்கிலியால் கட்டப்பட்ட சிங்கக் குட்டி ஒன்று அமர்ந்து பெண் மற்றும் ஆணுடன் காரின் முன் இருக்கைகளில் அமர்ந்து செல்வதைக் காட்டுகிறது.

சம்பவத்தின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர் ஒருவர் காரை ஓட்டிச் சென்றதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் சிங்கத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் அதிகாரப்பூர்வ பதிவு தேவை.

குறித்த பெண் தாய்லாந்து நபரிடம் இருந்து இந்த சிங்கக்குட்டியை வாங்கியதாகவும், எனவே அவர் சிங்கக்குட்டியை பட்டாயாவிற்கு கொண்டு வந்ததாகவும், ஆனால் அதற்கு முன் சட்டப்பூர்வ அனுமதியை பெற தவறியதாகவும், எனவே இந்த விலங்கின் போக்குவரத்து மற்றும் உரிமை சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதன்படி, அனுமதியின்றி காட்டு விலங்கை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 100,000 பாட் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கக்குட்டியை வாடகை விடுதியில் தங்கவைத்ததாக கூறப்படும் இலங்கையரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

Coles கடைகளில் இன்று முதல் கத்தி விற்பனைக்கு தடை

ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Coles-இல் இனி கத்தி விற்பனையை நிறுத்தியுள்ளது. 13 வயது சிறுவன் ஊழியர் ஒருவரை குத்தியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள Coles...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. வெளிநாட்டு தாக்கங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் அச்சுறுத்தலுக்கு...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...