Spam செய்திகளை Lock Screen-ல் இருந்தபடியே Block செய்யும் அம்சத்தை WhatsApp வெளியிட்டுள்ளது.
WhatsApp-ல் Spam செய்திகள் தொல்லை தரக்கூடியவை. அவை உங்கள் இன்பாக்ஸை நிரப்புவதோடு, மோசடி செயலிகளையும் கொண்டிருக்கலாம்.
இந்நிலையில் உங்கள் ஸ்மார்ட்போனின் Lock Screenல் இருந்தே ஸ்பேமுக்கு எதிராக போராட உங்களை வலுப்படுத்தும் ஒரு புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஸ்பேம் செய்திகளைத் தடுக்க, WhatsApp-ஐ திறந்து, chat இற்கு சென்று, பின்னர் அமைப்புகளில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் தற்போது இந்த செயல்முறையை WhatsApp-ன் புதுப்பிப்பு கணிசமாக எளிதாக்குகிறது.
சந்தேகத்திற்குரிய செய்தி உங்கள் Lock Screen-ல் தோன்றும்போது, அறிவிப்பை நீண்ட நேரம் அழுத்தவும், “பதில்” என்பதற்கு அடுத்ததாக புதிய “தடு” என்ற விருப்பத்தைப் பார்ப்பீர்கள். இதன் மூலம் தொல்லை தரக்கூடிய ஸ்பேம் செய்திகளை லாக் ஸ்கிரீனில் இருந்தப்படியே வாட்ஸ்அப்பில் பிளாக் செய்து கொள்ள முடியும்.