Cinemaமீண்டும் திசை மாறும் நடிகை சமந்தா

மீண்டும் திசை மாறும் நடிகை சமந்தா

-

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான சமந்தா, நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா மயோடிசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கிய சமந்தா விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் நோயினால் பாதிக்கப்பட்டார். இதையொட்டி சிகிச்சைக்கு பின் சினிமாவில் இருந்து விலகி சமந்தா ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார்.

சமூக வலைதளங்களில் தன் புகைப்படங்களை பகிர்ந்து வரும் சமந்தா தற்போது புதிய காணொளியொன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் ”நான் எப்போது மீண்டும் நடிக்க வருவேன் என பலர் கேட்கிறார்கள். விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளேன். ஆனால் அதற்கு முன்பு உடல் நலம் பற்றிய பதிவு ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுவேன். அது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்” என கூறினார்.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...