Newsஇனி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம்

இனி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம்

-

கிழக்கு ஆப்பிரிக்காவின் தீவு நாடான மடகஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு 600 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துவருவதால் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகஸ்கர் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு இரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் இன்று மடகஸ்கர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்று பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உடன் சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

இந்த சட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கப்படும்.

10 முதல் 13 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலமோ அல்லது இரசாயன முறையிலோ ஆண்மை நீக்கப்படும். 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கப்படும்.

ஆண்மை நீக்கம் மட்டுமின்றி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மடகஸ்கர் அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...