Cinemaசாதனை படைத்த "Deadpool & Wolverine" டீசர்

சாதனை படைத்த “Deadpool & Wolverine” டீசர்

-

வெளியான 24 மணி நேரத்தில் 365 மில்லியன் பார்வைகள் பெற்று, உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற சாதனையை Marvel-ன் ‘Deadpool & Wolverine’ டீசர் படைத்துள்ளது.

Marvel கதாபாத்திரங்களில் ஒன்றான Deadpool கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை ‘Deadpool’, ‘Deadpool 2’ ஆகிய படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் இதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்தில் X-men படங்கள் மூலம் பிரபலமான Wolverine கதாபாத்திரமும் இடம்பெற்றுள்ளதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்படத்தின் டீசர் கடந்த 12ம் திகதி அதிகாலை YouTube-ல் வெளியான நிலையில், 24 மணி நேரத்தில் 365 மில்லியன் பார்வைகளைக் கடந்து இந்த டீசர் சாதனை பெற்றுள்ளது. மேலும் உலக அளவில் இதுவரை வெளியான டீசர்களில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இதற்கு முன்னால், Marvel-ன் ‘Spiderman: No Way Home’ (355.5 மில்லியன்), ‘Avengers : Endgame’ (289 மில்லியன் ) ஆகிய படங்களில் டீசர்கள் அதிக பார்வைகளை பெற்ற டீசர்களாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ‘Deadpool & Wolverine’ உடைத்துள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...