ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடியாக, அதன் எல்லை நகரான பெல்கராலில் உக்ரைன் நேற்று (15ம் திகதி) ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குழந்தை உட்பட 6 போ் உயிரிழந்ததுடன் 18 போ் காயமடைந்துள்ளனர்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நோட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறி வருகிறது.
இந்நிலையில், ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு நேட்டேவில் இணைய ஆா்வம் காட்டியதையடுத்து, அந்நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் 4 பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
அந்தப் பிரதேசங்களில் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவும், ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.
நன்றி தமிழன்