குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இளைஞர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், சிறார்களுக்கு கத்திகள் விற்பனை செய்வதை தடை செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இங்குள்ள டீலர்கள் கூரிய ஆயுதங்கள் வாங்க வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்க வேண்டும்.
குயின்ஸ்லாந்தில் கூரிய ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு தற்போது எந்த தடையும் இல்லை, மேலும் இளைஞர்களின் குற்றங்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக சிறார்களுக்கு கத்திகளை விற்பனை செய்வதை தடை செய்ய முன்மொழிவுகள் உள்ளன.
இதற்கிடையில், பொது இடங்களில் கத்தியை எடுத்துச் செல்வோருக்கான சிறைத்தண்டனை 12லிருந்து 18 மாதங்களாக அதிகரிக்கப்படும் என்று அம்மாநில பிரதமர் ஸ்டீபன் மைல்ஸ் அறிவித்தார்.
மேலும் பேசிய குயின்ஸ்லாந்து பிரதமர், தனது சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே முதன்மையான முன்னுரிமை என்று கூறினார்.
குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மட்டுமின்றி ஆஸ்திரேலியா முழுவதிலும் இளைஞர் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருப்பதாகவும், இந்த நிலையை கட்டுப்படுத்த ஆலோசனை சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.