Newsபப்புவா நியூ கினியாவில் பழங்குடியினரிடையே மோதலில் 53 பேர் உயிரிழப்பு

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினரிடையே மோதலில் 53 பேர் உயிரிழப்பு

-

பசிபிக் கடலில் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா அருகிலுள்ள பப்புவா நியூ கினியா தீவில் அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சண்டை அத்தீவின் எங்கா மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. “பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது” என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், “பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை அளித்து வருகிறோம்” என்றார்.

பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் இன்னும்

மனிதத் தொடர்பில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கு முன் எங்கா மாகாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ராஜினாமா செய்த NSW போக்குவரத்து அமைச்சர்

நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹாலன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் பயணங்களுக்கு அரசாங்க ஓட்டுநர்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு சம்பவத்தை...

உலகளவில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Lancet Respiratory Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடம் 53...

கடுமையான வெப்பத்திற்குப் பிறகு விக்டோரியாவின் பல பகுதிகளுக்கு மழை பெய்யும் அறிகுறி

தெற்கு விக்டோரியாவில் குளிர்ச்சியான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று அதிகாலை முதல் குளிர் காலநிலை எல்லையைத் தாண்டி தெற்கு ஆஸ்திரேலியா மற்றும்...

போலியான குறுஞ்செய்தி, அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் பற்றி எச்சரிக்கை

அரசாங்க அதிகாரிகளிடமிருந்து வருவதாகக் கூறப்படும் போலி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு மையம் என்று கூறிக் கொண்டு, தனிநபர்களிடமிருந்து...