ஆஸ்திரேலியாவின் முதல் உள்நாட்டு ராக்கெட்டை ஏவுவதற்கு குயின்ஸ்லாந்து மாநிலம் தயாராகி வருகிறது.
கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜி நிறுவனத்தால் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டின் முதல் புகைப்படம் ஏற்கனவே ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக 55 மில்லியன் டொலர்கள் மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாதத்துக்குள் முதல் ஒத்திகை ஏவப்பட உள்ளதாகவும், அது சரியாக நடந்தால் எரிஸ் என்ற ராக்கெட் விண்ணில் ஏவ தயாராக இருக்கும் என்றும் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆடம் கில்மோர் தெரிவித்தார்.
இதற்கு, ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஒப்புதல் பெறப்பட உள்ளது, விரைவில் அது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிஸ் என்று பெயரிடப்பட்ட இந்த ராக்கெட் 30 டன்களுக்கும் அதிகமான எடையும் சுமார் 25 மீட்டர் நீளமும் கொண்ட ஆளில்லா ராக்கெட் ஆகும்.
இந்த திட்டம் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவின் முதல் உள்நாட்டு ராக்கெட் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஏவப்படும்.