சிட்னியின் சூதாட்ட கிளப்புகள் மீது பல குற்றச் செயல்கள் பதிவாகியதை அடுத்து புதிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சிட்னியின் மிகவும் பிரபலமான கேசினோ கிளப், தி ஸ்டார், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் மையமாக மாறியிருப்பது தெரியவந்ததை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.
குறித்த சூதாட்ட விடுதிக்கு 100 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டதோடு, அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியூ சவுத் வேல்ஸ் இன்டிபென்டன்ட் கேசினோ கமிஷன் வழக்கறிஞர் ஆடம் பெல்லை 15 வார விசாரணை நடத்த நியமித்தது.
எவ்வாறாயினும், குறித்த கசினோ கிளப் தனது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, இந்த சூதாட்ட விடுதியில் பணமோசடி, குற்றவாளிகள் சூதாட்டம், மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சூதாட்ட நிலையம் மூடப்பட்டதன் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழந்துள்ளதாகவும், உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு முழுமையாக சீர்திருத்தப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
எவ்வாறாயினும், “தி ஸ்டார்” நிறுவனம் தனது கசினோ உரிமத்தை திரும்பப் பெற முயற்சிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.