Newsவிண்வெளியில் பயணிக்க விரும்பும் 11 வயது எழுத்தாளர்.

விண்வெளியில் பயணிக்க விரும்பும் 11 வயது எழுத்தாளர்.

-

இங்கிலாந்தின் நோர்தாம்ப்டன் பகுதியை சேர்ந்த ஆஸ்டன் (Aston) எனும் சிறுவன், நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு உதவுவதற்காக, “திங்க்ஸ் அபவுட் ஸ்பேஸ்” (Things About Space) எனும் புத்தகத்தை தனது 8 ஆவது வயதில் எழுதி, படிப்பதற்கு சிரமம் உள்ளவர்களுக்கு அதன் ஒலி பதிப்பையும் வெளியிட்டு புகழ் பெற்றான்.

ஆஸ்டனின் புத்தகம், 700 பிரதிகளுக்கும் மேல் விற்று தீர்ந்தது. ஆஸ்டன் முதலில் எழுதிய பதிப்புகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால், கடந்த ஆண்டு, அதன் இரண்டாவது பதிப்பை மீண்டும் வெளியிட வேண்டியிருந்தது.

“பல நண்பர்கள் அந்த புத்தகத்தைப் பற்றி கேட்டது எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. புத்தகம் எழுதி வெளியிடுவது எப்படி என கேட்பவர்களுக்கு நான் சொல்வது, மனது வைத்தால் யாராலும் இதை செய்ய முடியும் என்பதுதான். என்றாவது ஒரு நாள் எதிர்காலத்தில் விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்” என ஆஸ்டன் வானொலி பேட்டியில் கூறினார்.

“ஆஸ்டனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என ஆஸ்டனின் தாயார் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் விண்வெளி வீரர் Tim Peake ஆஸ்டனின் புத்தகத்தை குறித்து கேள்விப்பட்டு அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியதுடன், ஆஸ்டனின் புத்தகத்தின் பிரதியில் கையெழுத்திட்டு வாழ்த்தினார்.

ஆஸ்டனுக்கு சில குழந்தைகளை தாக்கும் அபூர்வ வளர்ச்சி குறைபாட்டு நோய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 11 வயது ஆகும் ஆஸ்டன் எழுதிய புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைத்த தொகையில் 1000 யூரோக்களை இங்கிலாந்து வானியல் நிறுவனத்திற்கு நன்கொடையாக ஆஸ்டனின் பெற்றோர் வழங்கினர்.

ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அந்த புத்தகத்தின் பல பிரதிகளை வாங்கி உள்ளூர் பள்ளிகளில் விநியோகித்தார்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...